CRIME
“அடிப்பாவி.. 6 வருடங்களாக கள்ளத் தொடர்பில் இருந்த மனைவி..!” அந்த ‘ஒரே ஒரு’ இன்ஸ்டா மெசேஜ்.. பீரோவைத் திறந்து பார்த்த கணவனுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. பரபரப்பு சம்பவம்..!!
சென்னையில் கணவனுடன் வாழ்ந்துகொண்டே சுமார் ஆறு ஆண்டுகளாகக் கள்ளத்தொடர்பில் இருந்த பெண் ஒருவர், வீட்டில் இருந்த 150 சவரன் தங்க நகைகளுடன் தனது காதலனுடன் கேரளாவுக்குத் தப்பியோடிய திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்த ஆதித்தன் என்பவருக்கும், இலக்கியா என்ற பெண்ணுக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு ஒரு நகைக்கடையில் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த ஜிஷ்ணு என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் இலக்கியாவிற்குப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. கடந்த மாதம் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், பீரோவில் இருந்த 150 சவரன் நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு, தனது குழந்தையுடன் இலக்கியா திடீரென மாயமாகியுள்ளார்.
மனைவி மற்றும் குழந்தையைக் காணாததால் அதிர்ச்சியடைந்த ஆதித்தன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இலக்கியா தன் மீதான நடவடிக்கையைத் திசைதிருப்ப பொய்ப் புகார்களை அளித்ததால் போலீஸ் விசாரணை முடங்கியது. இதனால் ஆதித்தன் நியாயம் வேண்டி நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவின் பேரில் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். விசாரணையில், இலக்கியா தனது காதலன் ஜிஷ்ணுவுடன் கேரளாவுக்குச் சென்று தனியாக வீடு எடுத்துத் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனி போலீஸார் கேரளா விரைந்து, நகைகளைத் திருடிச் சென்ற இலக்கியாவைக் கைது செய்து, அவரிடமிருந்து நகைகளைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
