குழந்தைகளைத் தாக்குவதற்கு பெயர் என்ன…? “தாய்மாமன் தடியடி திட்டமா..?” உதயநிதி ஸ்டாலின் கொந்தளிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குழந்தைகளைத் தாக்குவதற்கு பெயர் என்ன…? “தாய்மாமன் தடியடி திட்டமா..?” உதயநிதி ஸ்டாலின் கொந்தளிப்பு..!!

Published

on

சென்னையில் பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, திங்கட்கிழமை நள்ளிரவில் காவல்துறையினர் அங்கு புகுந்து மின்சாரத்தைத் துண்டித்ததுடன், போராடிய செவிலியர்களைக் குண்டுக்கட்டாகக் கைது செய்து அராஜகத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தக் கைது நடவடிக்கைக்குத் தமிழகச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை நோக்கிக் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது, தாங்கள் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று வசனம் பேசிய ‘கோமாளி ஆட்சியாளர்கள்’, இன்றைக்கு அவர்களின் கோரிக்கைகளைத் தீர்க்காமல் அடக்குமுறையைக் கையாள்வதாகத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பதிவில் மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார்.

Advertisement

முன்னதாக, “செவிலியர்கள் மீது சிறு கீறல் விழுந்தாலும் பொறுக்க மாட்டோம்” எனத் தேர்தல் காலத்தில் மேடைகளில் ‘பஞ்ச் டயலாக்’ பேசியவர்கள், தற்போது போராடும் செவிலியர்களை மட்டுமின்றி அவர்களின் பிஞ்சு குழந்தைகள் மீது கூடத் தாக்குதல் நடத்துவது வெட்கக்கேடானது என்று உதயநிதி விமர்சித்துள்ளார். “குழந்தைகளைத் தாக்குவதற்குப் பெயர் என்ன தாய்மாமன் தடியடி திட்டமா?” என்று கேள்வியெழுப்பிய அவர், செவிலியர்கள் மீதான அடக்குமுறையை உடனடியாக நிறுத்தி, அரசு அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in