LATEST NEWS
“நெஞ்சே நடுங்குது.. அசுர வேகத்தில் வந்த கார்.. கண் இமைக்கும் நேரத்தில் காற்றில் பறந்த சிறுவன்… இறுதியில் நேர்ந்த அதிசயம்.. மிரள வைக்கும் சிசிடிவி காட்சி..!!!
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில், சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் மீது கார் ஒன்று அதிவேகமாக மோதி தூக்கி வீசப்பட்ட நிலையில், அவன் எவ்வித காயமுமின்றி அதிசயத்தக்க வகையில் உயிர் பிழைத்த நெஞ்சை உருக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள ஒரு சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த சிறுவன், திடீரென சாலையின் மறுபக்கத்திற்கு ஓட முயற்சி செய்துள்ளான். அப்போது அந்தச் சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக அந்தச் சிறுவன் மீது பயங்கரமாக மோதியது.
காரின் வேகத்தினால் அந்தச் சிறுவன் காற்றில் பல அடி தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டு, சாலையில் பலமுறை உருண்டு விழுந்தான். விபத்தின் கொடூரத்தைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் சிறுவன் உயிரிழந்திருக்கக்கூடும் என்று பதறிப்போய் ஓடி வந்தனர். ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, விழுந்த அடுத்த சில நொடிகளிலேயே அந்தச் சிறுவன் தானாக எழுந்து எவ்வித பெரிய காயமுமின்றி நடந்து சென்றான். இந்த விபத்தின் நேரடி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி, குழந்தைகளைச் சாலைகளில் தனியாக விட வேண்டாம் என்ற விழிப்புணர்வு எச்சரிக்கையுடன் நெட்டிசன்களிடையே வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
