CRIME
“அடிப்பாவி.. தூக்க மாத்திரை கொடுத்து மாபெரும் துரோகம்..” கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு பக்கா ஸ்கெட்ச் போட்ட மனைவி.. அந்த ஒரு போன் கால் டீடைல் அம்பலமான உண்மை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் சாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமண்கேடா கிராமத்தில், கணவன் தீரேந்திர பாஸ்வானின் அண்ணன் மகனான சதீஷ் பாஸ்வானுடன் ரீனா பாஸ்வான் என்ற பெண்ணிற்கு கள்ளக்காதல் இருந்துள்ளது. இந்தத் தகாத உறவு கணவன் தீரேந்திராவிற்குத் தெரியவந்ததை அடுத்து, அவர் வீட்டின் உள்ளே சிசிடிவி கேமராக்களைப் பொருத்த ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளார். இதனால் தங்களது கள்ளக்காதல் அம்பலமாகிவிடும் என்று அஞ்சிய ரீனாவும் அவரது கள்ளக்காதலனான அண்ணன் மகனும் சேர்ந்து, தீரேந்திராவைத் தங்களது பாதையிலிருந்து நிரந்தரமாக அகற்ற ஒரு கொடூரமான கொலைத் திட்டத்தைத் தீட்டியுள்ளனர்.
திட்டமிட்டபடி கடந்த மே 10-ஆம் தேதி இரவு, ரீனா தனது கணவன் தீரேந்திராவின் உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். அவர் மயக்கமடைந்ததை அடுத்து, நள்ளிரவில் கள்ளக்காதலன் சதீஷை வீட்டிற்கு வரவழைத்த ரீனா, இருவரும் சேர்ந்து கனமான உலக்கையால் தீரேந்திராவின் தலையில் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், சடலத்தை வீட்டின் பின்புறம் இருந்த ஒரு கட்டிலில் போட்டுவிட்டு, வீட்டில் இருந்த ரத்தக் கறைகளைத் துடைத்துச் சுத்தப்படுத்தியுள்ளனர். இந்த கொடூரக் குற்றத்தை மறைப்பதற்காக, ரீனா தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பகைதான் கொலைக்குக் காரணம் என்று காவல்துறையினரிடம் பொய்ப் புகார் அளித்து போலீசாரைத் திசைதிருப்ப முயன்றுள்ளார்.
தொடக்கத்தில் அண்டை வீட்டாரை விசாரித்த போலீசாருக்கு, சம்பவ இடத்தில் கிடைத்த தடயவியல் ஆதாரங்களும் ரீனாவின் முன்னுக்குப் பின் முரணான பதில்களும் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தின. இதையடுத்து ரீனாவின் மொபைல் போன் அழைப்பு விவரங்களை போலீசார் ஆய்வு செய்தபோது, கொலை நடந்த அன்று இரவே ரீனாவிற்கும் அவரது அண்ணன் மகனுக்கும் இடையே சுமார் 60 முதல் 100 முறை போன் கால்கள் பேசப்பட்டிருப்பது அம்பலமானது. கள்ளத்தொடர்பிற்காகச் சதீஷ் இரண்டு ரகசிய சிம் கார்டுகளைப் பயன்படுத்தியதும் போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இறுதியாகப் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கள்ளக்காத ஜோடி தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட உலக்கை மற்றும் முக்கிய ஆதாரங்களுடன் இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
