அடக்கொடுமையே..! “லைக்குகளுக்காக உயிரை விட்ட சிறுவன்” போலீஸ் எச்சரித்தும் தண்டவாளத்தில் நிகழ்ந்த பகீர் கொடூரம்… நடுங்கவைக்கும் வீடியோ வைரல்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கொடுமையே..! “லைக்குகளுக்காக உயிரை விட்ட சிறுவன்” போலீஸ் எச்சரித்தும் தண்டவாளத்தில் நிகழ்ந்த பகீர் கொடூரம்… நடுங்கவைக்கும் வீடியோ வைரல்…!!

Published

on

ஒடிசாவின் கோர்தா-பொலாங்கிர் ரயில் பாதைக்கு அருகே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த மைனர் சிறுவன் ஒருவன், வேகமாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். சமூக ஊடக மோகத்தால் நிகழ்ந்த இந்த விபரீத சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இந்த சிறுவன், இதற்கு முன்பும் ஓடும் ரயிலின் அடியில் ஆபத்தான முறையில் படுத்து ஸ்டண்ட் செய்யும் வீடியோவை வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தான். இதனையறிந்த ரயில்வே போலீஸார், அச்சிறுவனின் குடும்பத்தினரை நேரில் அழைத்து, அவனது ஆபத்தான செயல்கள் குறித்து எச்சரித்து அனுப்பியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

போலீஸாரின் எச்சரிக்கையையும் மீறி, மீண்டும் ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளம் அருகே ரீல்ஸ் செய்ய முயன்றதே அவனது உயிரைப் பறிக்கும் விபத்தாக முடிந்துள்ளது. லைக்குகளுக்காகவும், பார்வைகளுக்காகவும் இளைஞர்களும் சிறுவர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என போலீஸார் மீண்டும் எச்சரித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in