LATEST NEWS
நடுரோட்டில் நடந்த பயங்கரம்.. பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்… பொதுமக்கள் முன்னிலையில் விழுந்த தர்மஅடி.. நெட்டிசன்களை அதிர வைத்த வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டில், பஜ்ரங் தள் அமைப்பினர் அந்தப் பெண்ணிற்கு ஆதரவாகச் செயல்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட நபரை பொதுவெளியில் வைத்து தர்மஅடி கொடுத்த பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. தமக்கு ஒரு நபரால் பாலியல் அச்சுறுத்தல் ஏற்பட்டதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் பஜ்ரங் தள் அமைப்பினர் தலையிட்டுள்ளனர். அவர்கள் அந்த நபரைப் பிடித்துப் பொதுமக்கள் முன்னிலையில் வீதியில் வைத்துச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எனினும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒருவரைப் பொதுவெளியில் தாக்குவது முறையானது அல்ல என்றும், குற்றம் சாட்டப்பட்ட நபர் உண்மையில் தவறு செய்துள்ளாரா இல்லையா என்பதைச் சட்டமும் நீதிமன்றமும் மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
