LATEST NEWS
செயலியில் ஒரு ரேட்… நேரில் கேட்டது வேறொரு ரேட்..! 15 நிமிஷம் காக்க வச்சிட்டு நடுரோட்டில் நடந்த பயங்கர மோதல்..! வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உபர் ஆட்டோ ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் இடையே கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்த பிறகு, உபர் செயலியில் காட்டப்பட்ட கட்டணத்தைப் பெறாமல், மீட்டர் படியும் பணம் தர வேண்டும் என்று ஓட்டுநர் கூறியதால் இந்த மோதல் வெடித்துள்ளது. அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் தாங்கள் தாமதமாகியதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
வைரலான அந்த வீடியோவில், தாங்கள் குறிப்பிட்ட கட்டணத்தில் செல்ல விருப்பமில்லாத போது இந்த புக்கிங்கை ஏன் ஏற்றுக்கொண்டீர்கள் என்று பயணிகள் ஓட்டுநரிடம் கேள்வி எழுப்புவது பதிவாகியுள்ளது. செயலியில் காட்டப்படும் கட்டண முறைக்கும், ஓட்டுநர் கேட்கும் மீட்டர் முறைக்கும் இடையே ஏற்பட்ட இந்த முரண்பாடு பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ஆட்டோ சேவைகளைப் பயன்படுத்தும் போது பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருவதுடன், இது போன்ற சிக்கல்களுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்து வருகின்றனர்.
