“ஸ்டாலினின் கனவு… விஜய்யின் கைகளில்” திமுகவின் ₹300 கோடி ‘பெரியார் அறிவுலகத்தை’ திறந்து வைக்கும் CM… மேடையில் செந்தில் பாலாஜிக்கு அழைப்பா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஸ்டாலினின் கனவு… விஜய்யின் கைகளில்” திமுகவின் ₹300 கோடி ‘பெரியார் அறிவுலகத்தை’ திறந்து வைக்கும் CM… மேடையில் செந்தில் பாலாஜிக்கு அழைப்பா..?

Published

on

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமாகக் கருதப்படும் கோவையில் உள்ள ‘பெரியார் அறிவுலகம்’ பிரம்மாண்டக் கட்டிடத்தை, தற்போதைய முதலமைச்சர் விஜய் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் ரூ.300 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், கட்டுமானத் தாமதம் மற்றும் ஆட்சி மாற்றத்தால் திறக்கப்படாமல் இருந்து, தற்போது தவெக ஆட்சியில் திறப்பு விழாவைக் காணவுள்ளது.

ஐந்து தளங்களைக் கொண்டுள்ள இந்த நவீனக் கட்டிடத்தில் பிரம்மாண்ட நூலகம், அறிவியல் மையம், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் மற்றும் புத்தாக்க நிறுவனங்களுக்கான இன்குபேஷன் சென்டர் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளன. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தத் திட்டத்தின் பணிகள் மிக வேகமாக முடுக்கப்பட்டு தற்போது திறப்பு விழாவுக்குத் தயாராகியுள்ளது.

Advertisement

இந்தக் கட்டிடம் அமைந்துள்ள கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான செந்தில் பாலாஜி இந்த அரசு விழாவில் பங்கேற்பாரா என்ற பெரிய எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்தத் திறப்பு விழாவை முடித்துவிட்டு முதலமைச்சர் விஜய், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றிக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கச் செல்லவுள்ளதும், அதே நேரத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் இந்தக் கட்டிடத்தைப் பின்னாள்களில் பார்வையிடத் திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in