LATEST NEWS
“எங்ககிட்டயே மாஸ் காட்டுறியா…? உங்க உயர் அதிகாரி கிட்ட பேசுறேன்..” நடுரோட்டில் போலீசாரையே மிரட்டிய போதை ஆசாமி.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியாவில், மதுபோதையில் காரில் அலார ஒலியை எழுப்பிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாகச் சென்ற வாலிபர் ஒருவரைப் போலீசார் தடுத்து நிறுத்தியபோது, அவர் போலீசாரையே மிரட்டிய அதிரடிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நாகரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிசுன்புரா சட்டி பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தியதும் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், “நாங்கள் எச்.ஓ மற்றும் சி.ஓ ஆகிய உயர் அதிகாரிகளிடம் பேசிக் கொள்வோம்” என்று கூறி காவல்துறையினரைக் கடுமையாக மிரட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
காவல்துறையினரின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் அந்த வாலிபர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போலீசார் அவரை வலுக்கட்டாயமாகத் தூக்கித் தங்களது காவல் வாகனத்தில் ஏற்றினர். பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர் மீது பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
