“அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ அசைக்க முடியாது” – ஆதவ் அர்ஜுனாவுக்கு இபிஎஸ் கொடுத்த மரண அடி… பரபரக்கும் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ அசைக்க முடியாது” – ஆதவ் அர்ஜுனாவுக்கு இபிஎஸ் கொடுத்த மரண அடி… பரபரக்கும் அரசியல் களம்..!!

Published

on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனங்களுக்குச் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். அதிமுகவில் இருந்து கிளைச்செயலாளர்கள் தவெகவிற்கு வந்துவிடுவார்கள் என ஆதவ் அர்ஜுனா கூறுவது வெறும் பகல் கனவு என்று அவர் சாடியுள்ளார்.

தவெகவில் எந்தவொரு முறையான கட்டமைப்போ, கிளைகளோ அல்லது அடிமட்ட நிர்வாகிகளோ இல்லை என்றும், சினிமா கவர்ச்சியால் மட்டுமே அவர்களுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும், தவெகவில் உள்ள ஒரு பொதுச்செயலாளர் பதவி என்பது 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்சிக்காக உழைத்த ஒரு அதிமுக கிளைச் செயலாளரின் பதவிக்கு மட்டுமே சமமானது என்று அவர் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.

Advertisement

அடுத்த கட்சிக்காரர்களைக் கூவிக்கூவித் தன் கட்சிக்கு அழைக்கும் ஒரு கேவலமான நிலைக்கு தவெக தள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், அதிமுக என்பது பல சோதனைகளைக் கடந்து வந்த ஒரு எஃகு கோட்டை என்றும், அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ அல்லது சிதைக்கவோ முடியாது என்றும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in