தீபாவளிக்கு டபுள் தமாக்கா..! 2 மாத ரேஷன் பொருட்கள் மொத்தமாக வழங்க தமிழக அரசு திட்டம்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தீபாவளிக்கு டபுள் தமாக்கா..! 2 மாத ரேஷன் பொருட்கள் மொத்தமாக வழங்க தமிழக அரசு திட்டம்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..!!

Published

on

தீபாவளியையொட்டி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நவம்பர் மாதத்திற்குரிய ரேஷன் பொருள்களை இரண்டு மாதத்திற்கான தொகையுடன் சேர்த்து மொத்தமாக வழங்க தமிழ்நாடு அரசு தீவிர திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஆயத்தப் பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் இம்மாத இறுதியில் இருந்தே தொடங்கப்படும் என்று உணவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள தற்போதைய சூழ்நிலையில், அரசின் இந்த முன்கூட்டிய மொத்தப் பொருள் விநியோகத் திட்டம் பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான ஆலோசனைகளை முதலமைச்சர் விஜய்யுடன்  நடத்தி, அதற்கான இறுதி முடிவு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in