LATEST NEWS
பெண்களுக்கு டபுள் ட்ரீட்..! தீபாவளியை முன்னிட்டு கிடைக்கும் ரூ.1,000 + ரூ.1,000.. அரசின் செம ஹேப்பி நியூஸ்..!!
நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, அதற்குக் முன்கூட்டியே அந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையை பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி ரூ.1,000 வரவு வைக்கப்பட்ட நிலையில், நவம்பர் முதல் வாரத்தில் அடுத்த தவணைத் தொகை கிடைக்கும்.
இதன்மூலம் வெறும் 20 நாள்கள் இடைவெளியில் தலா ரூ.1,000 வீதம் இருமுறை மகளிர் உரிமைத் தொகை பயனர்களுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. எனினும், இதுகுறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
