“இதென்னங்க சட்டம்.” 1700 அடி ஆழ பள்ளத்தாக்கில் குதித்த வாலிபர்.. தற்கொலைக்கு முன் வெளியிட்ட 13 நிமிட வீடியோ.. மனைவியின் சித்திரவதை அம்பலம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“இதென்னங்க சட்டம்.” 1700 அடி ஆழ பள்ளத்தாக்கில் குதித்த வாலிபர்.. தற்கொலைக்கு முன் வெளியிட்ட 13 நிமிட வீடியோ.. மனைவியின் சித்திரவதை அம்பலம்..!!

Published

on

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது மனைவி மற்றும் மாமனார் குடும்பத்தினர் கொடுத்த மன உளைச்சல் மற்றும் சித்திரவதை காரணமாக 1700 அடி உயரமுள்ள மலை உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்வதற்கு முன்பாக, தம்பதியர் சட்டங்களில் அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து 13 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியைச் சேர்ந்த விஸ்வராஜ் கோஹில் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்குக் கடந்த பிப்ரவரி 8, 2026 அன்று திருமணம் நடந்துள்ளது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது குடும்ப வாழ்க்கையில், சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு வெடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பரில் அவரது மனைவி குடும்ப வன்முறைச் சட்டத்தின்கீழ் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Advertisement

இந்த வழக்கின் காரணமாக கடந்த அக்டோபர் 9 அன்று அவர் நீதிமன்றத்திலும் நேர்நிற்க வேண்டியிருந்தது. நீதிமன்ற வழக்கு மற்றும் குடும்பத் தகராறு கொடுத்த கடுமையான மன உளைச்சலால் விரக்தியடைந்த விஸ்வராஜ், அக்டோபர் 12 அன்று ஹரிஷ்சந்திரகாட் பகுதியில் உள்ள கொங்கன்கடா மலைப்பகுதியின் எல்லையிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

மலைப்பாதையில் நின்றுகொண்டிருந்த அவரது பைக்கை பார்த்து சந்தேகமடைந்த வழிப்போக்கர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். பள்ளத்தாக்கு மிகவும் ஆழமாக இருந்ததால் டிரோன் கேமராக்கள் மற்றும் மலையேற்ற வீரர்களின் உதவியோடு விஸ்வராஜின் உடல் மீட்கப்பட்டது. அவர் கடைசியாக வெளியிட்ட வீடியோ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தற்கொலை தூண்டல் வழக்கின்கீழ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in