அடப்பாவமே..! நெற்றியில் கொடுத்த ஒரே ஒரு முத்தம்… சொந்த நாட்டுக்கே சொல்லாமல் ரகசியமாகத் நிறைவேற்றிய தூக்கு தண்டனை.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடப்பாவமே..! நெற்றியில் கொடுத்த ஒரே ஒரு முத்தம்… சொந்த நாட்டுக்கே சொல்லாமல் ரகசியமாகத் நிறைவேற்றிய தூக்கு தண்டனை.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்..!!

Published

on

சவுதி அரேபியாவின் புனித நகரமான மெக்காவில் உள்ள மசூதி ஒன்றில் “ஒழுக்கக்கேடான செயலில்” ஈடுபட்டதாகக் கூறி, வங்கதேசத்தைச் சேர்ந்த இரண்டு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டுகள் குறித்த முறையான விவரங்கள் ஏதுமின்றி ரகசியமாகத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதும், தண்டனை முடிந்த பின்னரே வங்கதேச அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதும் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் சிட்டகாங் மாகாணத்தைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் என்பவர், சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள புகழ்பெற்ற மஸ்ஜித் அல்-ஹரம் மசூதியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தார். அதேபோல், அங்கு தங்கிப் பணியாற்றி வந்த சிட்டி அக்தர் என்ற இளம்பெண்ணுடன் அவர் பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஜோடி மசூதி வளாகத்திற்குள் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதாகக் கூறி சவுதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களின்படி, அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நஸ்ருல் மற்றும் சிட்டி அக்தர் ஆகிய இருவருக்கும், கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்போ அல்லது அவர்களின் கைது நடவடிக்கையின் போதோ, சவுதி அரேபியா தங்கள் நாட்டுத் தூதரகத்திற்கோ அல்லது வங்கதேச அரசாங்கத்திற்கோ எந்தவித அதிகாரப்பூர்வத் தகவலும் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சொந்த நாட்டு குடிமக்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் ரகசியமாகத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது வங்கதேசத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அங்குள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் கடும் பீதியையும் உருவாக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in