CRIME
இது என்ன கொடுமை..! “என் மேல கேஸ் கொடுத்தா உங்க மேல கேஸ் போடுவேன்.. 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தட்டிக்கேட்ட பெற்றோரையே மிரட்டிய அரசுப் பள்ளி ஆசிரியர்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பள்ளியில் பணியாற்றி வரும் மனோஜ் குமார் கவுதம் என்ற ஆசிரியர், 14 வயதுடைய யாதவ் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியைத் தொலைக்காட்சி இயக்கக் கற்றுத் தருவதாகக் கூறி தனியாக அழைத்துச் சென்று, அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்துத் தன் குடும்பத்தினரிடம் கூறியதை அடுத்து, அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளனர். ஆனால், தன் தவறை உணர்வதற்குப் பதிலாக அந்த ஆசிரியர், தன் மீது புகார் அளித்தால் குடும்பத்தினர் அனைவர் மீதும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவதாக பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
விசாரணையில், இந்த ஆசிரியர் ஏற்கனவே சுனார் பகுதியில் பணியாற்றியபோதும் இதேபோன்று சிறுமிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அப்போது தன் மீதான புகார்கள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து மாறுதல் பெற்று ஓடிவந்துள்ளார். தொடர்ச்சியாக இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு வரும் இந்த ஆசிரியர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
