நள்ளிரவில் பயங்கரம்..! இரட்டை சிறுவர்களின் சடலங்களை 250 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று… தாயின் ஆடையில் இருந்த இரத்தக் கறையால் அம்பலமான ரகசியம்..!! – cinefeeds
Connect with us

CRIME

நள்ளிரவில் பயங்கரம்..! இரட்டை சிறுவர்களின் சடலங்களை 250 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று… தாயின் ஆடையில் இருந்த இரத்தக் கறையால் அம்பலமான ரகசியம்..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் டீக் மாவட்டத்தில் உள்ள படேஸ்ரா கிராமத்தில் 13 வயதுடைய வினய், விஷ்ணு என்ற இரட்டைச் சகோதரர்கள் கொடூரமான முறையில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை, இவர்களின் உடல்கள் வீட்டில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு காலி மனையில் கண்டெடுக்கப்பட்டன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்த இந்த சிறுவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளாகத் தங்கள் தாயுடன் தாத்தா வீட்டில் வசித்து வந்த நிலையில் இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாகச் சிறுவர்களின் தாய், ஒரு வாலிபர் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய மூன்று பேரை போலீஸார் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த வீட்டில் இருந்து இரத்தக் கறை படிந்த கோடாரி ஒன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும், சிறுவர்களின் தாயின் உடையில் இரத்தக் கறைகள் இருந்ததும், கொலையை மறைப்பதற்காக அந்த இடம் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டிருப்பதும் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் போலீஸாரின் சந்தேகப் பார்வை தற்போது தாயின் மீதே திரும்பியுள்ளது.

Advertisement

கொலை நடந்த பிறகு உடல்களைக் காலி மனைக்குக் கொண்டு சென்று வீசியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திலிருந்து மாதிரிகளைச் சேகரித்துள்ள நிலையில், தாயின் மொபைல் போன் அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்களையும் போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்தக் கொலைக்கான உண்மைப் பின்னணி மற்றும் காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in