“நான் அவளைக் கொல்லப் போகவில்லை, ஆனா..” மனைவி மீது கண்மூடித்தனமாக வெடித்த 12 தோட்டாக்கள்.. கணவனின் திடுக்கிடும் நீதிமன்ற வாக்குமூலம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“நான் அவளைக் கொல்லப் போகவில்லை, ஆனா..” மனைவி மீது கண்மூடித்தனமாக வெடித்த 12 தோட்டாக்கள்.. கணவனின் திடுக்கிடும் நீதிமன்ற வாக்குமூலம்..!!

Published

on

துருக்கியின் தியார்பகீர் நகரில், தனக்குத் தெரியாமல் கருக்கலைப்பு செய்ததாகக் கூறி, தனது கர்ப்பிணி மனைவி இலாய்டா அல்காஷ் (22) என்பவரைத் துப்பாக்கியால் 12 முறை சுட்டுக் கொன்ற கணவன் ஜெமால் அல்பஸ்லான் (30) நீதிமன்றத்தில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். “நான் எனது மனைவியை மிகவும் நேசித்தேன், முதல்முறையாகத் தந்தை ஆகும் உணர்வை அனுபவிக்க இருந்தேன்; அவளைக் கொல்லும் நோக்கில் நான் அங்கு செல்லவில்லை” என்று அவர் கூறியுள்ளார். தன்னைத் பின்தொடர்ந்து வந்த ஜெமாலிடம், “ஏன் என்னை இப்படித் துரத்துகிறாய், நான் கருக்கலைப்பு செய்துவிட்டேன்” என்று இலாய்டா கூறியதைக் கேட்டதும், ஆத்திரத்தில் தனது தலைக்கு ரத்தம் ஏறியதாகவும், அந்த கணத்தில் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கைத்துப்பாக்கியால் இலாய்டாவை நோக்கிச் சரமாரியாகச் சுட்டதாகவும் ஜெமால் தெரிவித்துள்ளார்.

“அவள் கருக்கலைப்பு செய்ததை அந்தத் தருணத்தில்தான் நான் உணர்ந்தேன், அதன் பிறகே கண்மூடித்தனமாகச் சுட்டேன்; இந்தச் சம்பவம் நடந்திருக்கக் கூடாது, நான் மிகவும் வருந்துகிறேன்” என்றும் அந்த நபர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். எனினும், ஒரு கர்ப்பிணிப் பெண்ணை 12 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாகக் கொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோட முயன்ற ஜெமால் அல்பஸ்லானைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், இந்த கொடூரக் கொலைக்கு எதிரான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in