CRIME
“ல்யாண செலவுக்கு பணமில்லை..” லிவிங்-டுடேதர்’ காதல் ஜோடி போட்ட பயங்கர ஸ்கெட்ச்… கடைசியில் போலீசில் முடிந்த க்ளைமாக்ஸ்…. நடந்தது என்ன..? பரபரப்பு பின்னணி..!!
ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த ரமணாரெட்டி மற்றும் வரலட்சுமி ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள குர்ரங்குடா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து லிவிங்-டுடேதர் முறையில் வாழ்ந்து வந்த இவர்கள், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால், வேலை இல்லாததால் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடி காரணமாக, திருமண செலவிற்காக பணம் சம்பாதிக்க செயின் பறிப்பில் ஈடுபட திட்டமிட்டனர்.
அதன்படி, இம்மாதம் 18-ஆம் தேதி காலை 6 மணியளவில், ஹஸ்தினாபுரம் வெங்கடரமணா காலனி அருகே உள்ள ராஜராஜேஸ்வரி கோவிலில் ராமுலம்மா (66) என்ற முதியவர் தனியாக தூய்மைப் பணி மற்றும் வழிபாடுகளைச் செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த இந்த ஜோடி, முதியவரின் வாயை மூடிப் பிடித்து, அவரது கழுத்தில் இருந்த 30 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வனஸ்தலிபுரம் போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளைக் கண்டறிந்து, அவர்களைக் கைது செய்து தங்கச் சங்கிலியை மீட்டனர்.
