நாடே அதிர்ச்சி..! எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய மத்திய அமைச்சர்..? பாலியல் குற்றவாளியுடன் தனியாக இருக்கும் போட்டோ லீக்.. பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நாடே அதிர்ச்சி..! எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய மத்திய அமைச்சர்..? பாலியல் குற்றவாளியுடன் தனியாக இருக்கும் போட்டோ லீக்.. பெரும் பரபரப்பு..!!

Published

on

அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள எப்ஸ்டீன் கோப்புகளின் புதிய பக்கங்களில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தனியாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் உயிரிழந்த எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை அமெரிக்காவின் US Justice Department வெளியிட்டு வருகிறது. இதில், அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆகிய இருவர் மட்டுமே ஒரு மேசையின் இருபுறமும் அமர்ந்து தனியாக ஆலோசனை நடத்துவது போன்ற படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

முன்னதாக, எப்ஸ்டீன் கோப்புகளில் தனது பெயர் இடம்பெற்றது குறித்து விளக்கமளித்திருந்த ஹர்தீப் சிங் புரி, தான் சர்வதேச அமைதிக்கான நிறுவனத்தின் (IPI) பிரதிநிதியாக இருந்தபோது, அந்தத் தூதுக்குழுவோடு இணைந்துதான் எப்ஸ்டீனை 3 அல்லது 4 முறை சந்தித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், தாங்கள் சந்தித்தது முற்றிலும் தொழில்முறை ரீதியிலானது என்றும், எப்ஸ்டீனின் பாலியல் குற்றச் செயல்களுக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

Advertisement

இருப்பினும், தற்போது வெளியாகியுள்ள புதிய புகைப்படங்களில் அந்தத் தூதுக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் எவரும் இல்லாமல், அமைச்சர் புரி மட்டும் எப்ஸ்டீனுடன் தனியாக இருப்பது எதிர்க்கட்சிகளிடையே புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. “அப்படியானால் மற்ற குழு உறுப்பினர்கள் எங்கே?” என்று காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி, இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in