டிரைவிங் லைசன்ஸ் வாங்க போறீங்களா..? இனி பாஸ் ஆகுறது அவ்ளோ ஈஸி இல்ல… மத்திய அரசின் அதிரடி திட்டம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டிரைவிங் லைசன்ஸ் வாங்க போறீங்களா..? இனி பாஸ் ஆகுறது அவ்ளோ ஈஸி இல்ல… மத்திய அரசின் அதிரடி திட்டம்..!!

Published

on

டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கான ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெறத் தேவைப்படும் குறைந்தபட்ச மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவோர் தேர்வு எழுதுவதற்கு முன்பாகக் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு பாடத்தைக் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்ற விதிமுறையும் கொண்டுவரப்பட உள்ளது.

மேலும், ஓட்டுநர் உரிமத்தில் பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்காகச் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 15 நாட்களுக்குள் உரிய முடிவெடுக்க வேண்டும். ஒருவேளை இந்த விண்ணப்பங்கள் மீது 30 நாட்கள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தால், அவை தானாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும். இந்த புதிய நடைமுறைகள் மற்றும் மாற்றங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in