நெஞ்சே பதறுது…! 30 கத்திக்குத்துகள்… அழிக்கப்பட்ட தடயங்கள்…! ரூம்மேட்டை கொடூரமாக கொன்று பீட்சா சாப்பிட்ட சைக்கோ… நண்பன் என்ற போர்வையில் அரங்கேறிய பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

நெஞ்சே பதறுது…! 30 கத்திக்குத்துகள்… அழிக்கப்பட்ட தடயங்கள்…! ரூம்மேட்டை கொடூரமாக கொன்று பீட்சா சாப்பிட்ட சைக்கோ… நண்பன் என்ற போர்வையில் அரங்கேறிய பயங்கரம்..!!

Published

on

பிரிட்டனில் 23 வயதான மாணவர் ஒருவர், தன்னுடன் பல்கலைக்கழகத்தில் தங்கிப் படித்த ஹவுஸ்மேட்டை கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். ஜாக் கஃப்லான் என்ற அந்த நபர், 21 வயதான ஜேமி காலின்ஸ் மீது கத்தியால் 30 முறை குத்தி கொலை செய்துள்ளார். பிரிஸ்டல் கிரவுண் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், அவர் குறைந்தபட்சம் 28 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

பிபிசி அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் 8 அன்று ஃபில்டன் பகுதியில் இருவரும் வசித்து வந்த வீட்டில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஜாக், ஜேமி வீட்டிற்குத் திரும்புவதற்காகக் காத்திருந்து திடீரெனத் தாக்குதல் நடத்தியுள்ளார். கொலையைச் செய்த பிறகு சுமார் எட்டு மணி நேரம் சடலத்தின் அருகிலேயே அமர்ந்திருந்த அவர், பின்னர் காவல்துறையைத் தொடர்புகொண்டுள்ளார். இந்த இடைவெளியில் அவர் பல தடயங்களை அழிக்க முயன்றுள்ளார்; ஜேமியின் சைக்கிளை அருகில் உள்ள ரீடெய்ல் பார்க்கில் விட்டுவிட்டு, புதிய துணிகளை வாங்கியுள்ளார். மேலும், இரத்தக் கறை படிந்த தனது பழைய ஆடைகளை ஒரு பையில் வைத்து, அது தண்ணீரில் மூழ்கியிருக்கும்படி செங்கற்களுடன் சேர்த்து ஒரு குளத்தில் வீசியுள்ளார். இதன்பிறகு வீடு திரும்பிய அவர், பீட்சா சாப்பிட்டுவிட்டு வீடியோ கேம் விளையாடியுள்ளார்.

Advertisement

விசாரணையின் தொடக்கத்தில் ஜாக் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, ஜேமி தன்னைத் தாக்குவான் என்று அஞ்சியதாகவும், தான் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் வாதிட்டார். இருப்பினும், வழக்கின் விசாரணையின் போது நீதிபதி ஜஸ்டிஸ் லிண்டன் அவரது வாதங்களை நிராகரித்தார்; இதனையடுத்து ஜாக் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். விசாரணையில், வீட்டிற்குள் ஜாக் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராக்கள், கொலைக்குப் பின்னான அவரது நடவடிக்கைகளைப் பதிவு செய்திருந்தது தெரியவந்தது. சடலத்தை ஏதோ பிறகு கண்டுபிடிக்கப்பட்டது போல் சித்தரிக்க அவர் முயன்றதும் தெரியவந்தது. இந்த வழக்கில் காவல்துறையும் நீதிமன்றமும் இது மிகவும் திட்டமிடப்பட்ட மற்றும் கொடூரமான குற்றச் செயல் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in