“ஐயோ.. சாக்கடையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்..” பின்னணியில் கணவனின் கொடூரம்.. போலீசாரே அதிரவைத்த சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ.. சாக்கடையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்..” பின்னணியில் கணவனின் கொடூரம்.. போலீசாரே அதிரவைத்த சம்பவம்..!!

Published

on

கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில், தனது மனைவி வேறொருவருடன் தொலைபேசியில் பேசுவதாகச் சந்தேகமடைந்த கணவன், அவரைக் கல்லைத் தாக்கிப் படுகொலை செய்துவிட்டு உடலைச் சாக்கடைக் கால்வாயில் வீசிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது இர்பான் (22) மற்றும் ருக்ஸானா (25) ஆகிய இருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. பிழைப்புத் தேடி ஆறு மாதங்களுக்கு முன்புதான் இவர்கள் பெங்களூரு வந்துள்ளனர். இர்பான் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்து வர, ருக்ஸானா வீட்டில் இருந்துள்ளார். ருக்ஸானா அடிக்கடி போனில் பேசிக் கொண்டிருந்ததால், அவர் மீது இர்பானுக்குக் கள்ளத்தொடர்பு சந்தேகம் ஏற்பட்டு இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு வெடித்துள்ளது.


இதன் தொடர்ச்சியாக, கடந்த அக்டோபர் 10 அன்று அவர்களுக்குள் மீண்டும் ஒரு கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற இர்பான், கல்லை எடுத்து ருக்ஸானாவை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், ஆதாரங்களை மறைக்க மனைவியின் உடலை அங்கிருந்த ஒரு பெரிய கழிவுநீர்க் கால்வாயில் வீசி எறிந்துள்ளார். அக்டோபர் 13 அன்று ருக்ஸானாவின் உடல் அழுகிய நிலையில் சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், கணவன் இர்பானே இந்தக் கொடூரக் கொலையைச் செய்தார் என்பதை உறுதிசெய்து அவசரமாகக் கைது செய்தனர். விசாரணையில் அவர் தனது குற்றத்தை முழுமையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in