LATEST NEWS
“நான் காதலுக்கு எதிரி அல்ல” 13-14 வயதிலேயே சிறுமிகளை கர்ப்பமாக்கிவிட்டு கைவிடாதீங்க… உ.பி ஆளுநரின் சர்ச்சை பேச்சு..!!
உத்தரபிரதேசம் மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒன்றில் உறவுகள் குறித்து ஆற்றிய உரை பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. லக்னோவில் உள்ள பல்கலைக்கழக நிகழ்வில் பேசிய அவர், தான் காதலுக்கு எதிரி அல்ல என்றும், ஆனால் சிறுவர்கள் 13-14 வயதிலேயே சிறுமிகளை கர்ப்பமாக்கிவிட்டு அவர்களைப் பாதியில் கைவிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
இளைஞர்கள் காதலித்து திருமணம் செய்ய விரும்பினால், முதலில் கொஞ்சமாவது சம்பாதித்து, தகுதியை வளர்த்துக் கொண்டு தன்னிறைவு பெற்ற பிறகு திருமணம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். அதை விடுத்து, மிகச் சிறிய வயதிலேயே பெண்களைக் கர்ப்பமாக்கிவிட்டு தூக்கி எறியும் போக்கு இருக்கக் கூடாது என்றும், வீட்டை விட்டு ஓடிப்போய் குடும்பத்தை நடத்த வழியில்லாமல் குழந்தைகளைப் பெற்றெடுப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் பேசியுள்ளார்.
ஆளுநர் ஆனந்திபென் படேல் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் பெண் மாணவிகள் லிவ்-இன் (Live-in) உறவுகளில் ஈடுபடக் கூடாது என்றும், பெண்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மாறினாலும் அதற்கு முன்பாக சமையல் செய்ய கற்றுக்கொண்டு ஒரு சிறந்த தாயாக மாற வேண்டும் என்றும் அவர் பேசிய கருத்துக்கள் ஏற்கனவே விவாதங்களை ஏற்படுத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
