அவனை தூக்கி உள்ளே வைங்க.. போலீஸ் உங்க கையில் தான இருக்கு… மத்திய அரசை கடுமையாக சாடிய அண்ணாமலை…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அவனை தூக்கி உள்ளே வைங்க.. போலீஸ் உங்க கையில் தான இருக்கு… மத்திய அரசை கடுமையாக சாடிய அண்ணாமலை…!!

Published

on

பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றுக்கொண்டு இந்தியாவில் போராட்டங்களை நடத்துவோர் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். யாராவது வெளிநாடுகளில் இருந்து பணம் கொடுக்குறானா..? போராட்டம் செய்கிறானா..? அவனை தூக்கி உள்ளே வைங்க.. எல்லா விதமான போலீஸும் உங்க கைகளில் இருக்கு.

மத்திய அரசிடம் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் உளவுத்துறை உள்ளிட்ட அனைத்து விதமான காவல் மற்றும் புலனாய்வு அமைப்புகளும் முழு அதிகாரத்துடன் கைகளில் உள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, நாட்டின் பாதுகாப்பைக் கெடுக்கும் சக்திகள் மீது வெறும் சமூக வலைதளங்களில் மட்டும் கருத்துகளைப் பதிவிட்டு கம்பு சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியாவின் உள்நாட்டு அமைதியைக் குலைக்க வெளிநாட்டுப் பணம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் முழுமையான பொறுப்பும் கடமையும் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என்று அண்ணாமலை திட்டவட்டமாகக் கூறியுள்ளார். சமூக வலைதளப் பிரச்சாரங்களைத் தாண்டி, களத்தில் இறங்கி அத்தகைய நபர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in