“அடச்சீ இப்படியும் ஒரு தந்தை-மகளா..?” கடைக்காரரின் கவனத்தைத் திசை திருப்பி உஷாராக ஸ்கெட்ச் போட்ட ஜோடி… விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் உண்மைகள்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ இப்படியும் ஒரு தந்தை-மகளா..?” கடைக்காரரின் கவனத்தைத் திசை திருப்பி உஷாராக ஸ்கெட்ச் போட்ட ஜோடி… விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் உண்மைகள்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் உள்ள ஜலில்பூர்-சந்த்பூர் பகுதியில், ஒரு தந்தையும் அவரது மகளும் வாடிக்கையாளர்களைப் போல நடித்து உரம் விற்கும் கடை ஒன்றில் ரூ.1.5 லட்சம் திருடிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடைக்கு வந்த தந்தை, உரங்களைப் பார்ப்பதற்காகக் கடைக்காரரைத் தனது மகளுடன் சேர்த்து கடையின் உள்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளார். கடைக்காரரின் கவனம் முற்றிலும் கடையின் உள்பகுதியில் இருந்த இளம் பெண்ணின் மீது திரும்பியிருந்த அந்தச் சரியான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட தந்தை, கடையின் வெளிப்பகுதியில் இருந்த கல்லாப்பெட்டியிலிருந்து சத்தமில்லாமல் ஒன்னரை லட்ச ரூபாயைத் திருடியுள்ளார். பணம் திருடப்பட்டதை அறியாத கடைக்காரர் வழக்கம் போல அவர்களிடம் பேசி அனுப்ப, திருடிய பணத்துடன் அந்தத் தந்தை-மகள் ஜோடி அங்கிருந்து தப்பியோடியுள்ளது.

அதன்பின்னர் கல்லாப்பெட்டியில் பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கடைக்காரர், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான் இந்த நூதனத் திருட்டின் மொத்த உண்மையும் அம்பலமானது. வாடிக்கையாளர்கள் போல வந்து திட்டமிட்டு இந்தத் திருட்டை அவர்கள் அரங்கேற்றியது சிசிடிவி பதிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்துப் புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்தத் தந்தை மற்றும் மகள் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், இவர்களுக்குப் பல்வேறு இடங்களில் நடந்த பிற திருட்டுச் சம்பவங்களிலும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in