“வேண்டாம் மாமா.. காரை ஏத்தாதீங்க..!” பெற்ற தாயைக் காப்பாற்ற கதறிய மகள்… வயலில் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“வேண்டாம் மாமா.. காரை ஏத்தாதீங்க..!” பெற்ற தாயைக் காப்பாற்ற கதறிய மகள்… வயலில் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!

Published

on

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் கந்தகல் கிராமத்தில், நீண்ட நாட்களாக நீடித்து வந்த சொத்து தகராறு காரணமாக, மைத்துனர் ஒருவர் தனது அண்ணி மீது பொலிரோ காரை ஏற்றி கொடூரமாகக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மங்களாதேவி என்ற பெண், பாகல்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபரீதத்திற்கு காரணமான அவரது மைத்துனர் சன்னப்பகவுடா நடகவுடர் மீது இல்கல் ஊரக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சுமார் 6 ஏக்கர் நிலத்தில் 2 ஏக்கர் நிலத்தை சன்னப்பகவுடா ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறப்படும் நிலையில், இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் மங்களாதேவி நிலத்தை முறையாக அளவீடு செய்து, வேலி அமைத்து பயிர் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சன்னப்பகவுடா, மங்களாதேவி வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது தனது பொலிரோ வாகனத்தை அவர் மீது ஏற்றியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தின் போது, மங்களாதேவியின் மகள் பிரியங்கா, தனது தாயார் மீது காரை ஏற்ற வேண்டாம் என்று கதறி அழுதபடி தனது மாமனிடம் கெஞ்சும் நெஞ்சை உலுக்கும் காட்சி அங்குள்ள மொபைல் போனில் வீடியோவாகப் பதிவாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in