அய்யோ கொடுமையே..! பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்… காதலித்த பெண்ணை கரம் பிடித்த சில நாட்களிலேயே விபரீத முடிவு.. தூத்துக்குடியில் சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கொடுமையே..! பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்… காதலித்த பெண்ணை கரம் பிடித்த சில நாட்களிலேயே விபரீத முடிவு.. தூத்துக்குடியில் சோகம்..!!

Published

on

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே உள்ள செண்பல்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் பழனிபாபு (வயது 25). இவர் சிவந்திபட்டி அருகே உள்ள முத்தூரைச் சேர்ந்த ராணி என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு இரு தரப்புப் பெற்றோர் மற்றும் குடும்பத்தாரிடமிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே பழனிபாபு விபரீத முடிவெடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in