LATEST NEWS
“கல்யாணம் பண்ணிக்கோ, இல்லைனா…” அதிகாலை 2:30 காதலனுக்கு வந்த வீடியோ கால்… 3 மணி நேரத்தில் நடந்த பெரும் சோகம்..! பதறவைக்கும் பின்னணி..!!
ஐதராபாத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 29 வயது பெண் மென்பொருள் பொறியாளர், நேற்று காலை தனது வாடகை வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். திருமண விவகாரம் தொடர்பாக காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அர்ச்சனா சௌத்ரி மாலிக் (29) என்ற பெண், ஐதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் சீனியர் அசோசியேட்டாகப் பணிபுரிந்து வந்தார். அவரோடு பணிபுரியும் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபருடன் கடந்த நான்கு ஆண்டுகளாக அர்ச்சனா காதலில் இருந்துள்ளார். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், அந்த நபருக்கு விவாகரத்து நடைமுறைகள் நடந்து வருவது தெரியவந்துள்ளது.
நேற்று அதிகாலை சுமார் 2:30 மணியளவில், காதலன் தனது தாயாருடன் ஒரு விசேஷத்தில் இருந்தபோது, அர்ச்சனா அவருக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது தன்னைத் திருமணம் செய்யாவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த அந்த நபர், அதிகாலை 5:30 மணியளவில் அர்ச்சனாவின் வீட்டிற்கு விரைந்து வந்துள்ளார். வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், அவர் உடனடியாக காவல்துறை அவசர எண் ‘112’-க்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அர்ச்சனா உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்ததை அடுத்து, அர்ச்சனாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
