“சமாதானம் பேச அழைத்த கணவன்..” நம்பிச் சென்ற 21 வயது மனைவிக்கு காத்திருந்த மரண பொறி.. காதல் திருமணம் செய்த 10-வது மாதம் நடந்த பயங்கரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“சமாதானம் பேச அழைத்த கணவன்..” நம்பிச் சென்ற 21 வயது மனைவிக்கு காத்திருந்த மரண பொறி.. காதல் திருமணம் செய்த 10-வது மாதம் நடந்த பயங்கரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

பீகாரின் சுபால் மாவட்டத்தில் காதல் திருமணத்திற்குப் பிறகு நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்திற்குச் சம்மதிக்காததால், சஞ்சீவ் சா என்ற கணவன் தனது 21 வயது மனைவி தாமினி குமாரியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் பழகி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியினருக்கு இடையே, சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக தாமினி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில், சமாதானம் பேசுவதாகக் கூறி அவரை வீட்டிற்கு வரவழைத்துக் கணவன் இந்தக் கொடூரத்தைச் செய்துள்ளார்.

தீவிர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாமினி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான கணவன் சஞ்சீவ் சாவை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், இந்த கொலையில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் சஞ்சீவின் தந்தை கேனு சாவையும் காவல்துறையினர் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in