CRIME
அடக் கொடுமையே.. நண்பர்களைப் பார்க்கச் சென்ற 25 வயது வாலிபர்.. திடிரென எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற துர்கம் செருவு கேபிள் பாலத்தில் இருந்து குதித்து, 25 வயது மென்பொருள் பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இந்த வாலிபர், ஹைதராபாத் நாச்சாரம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று மாதப்பூரில் உள்ள தனது நண்பர்களைச் சந்திப்பதற்காகச் சென்ற ராஜேஷ், திடீரென கேபிள் பாலத்தின் மீது ஏறி அங்கிருந்து துர்கம் செருவு ஏரிக்குள் குதித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், ஏரிக்குள் குதித்த ராஜேஷின் உடலை மீட்பதற்காகத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன, நண்பர்களைச் சந்திக்கச் சென்ற இடத்தில் என்ன நடந்தது என்பது குறித்து மாதப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேபிள் பாலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்ட பிறகும் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
