சர்க்கரை நோயாளிகளுக்கு குட் நியூஸ்..! இனி உங்களுக்கு ஏற்ற அன்னதானம்… திருச்செந்தூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 17 முக்கிய கோயில்களில் அதிரடி மாற்றம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சர்க்கரை நோயாளிகளுக்கு குட் நியூஸ்..! இனி உங்களுக்கு ஏற்ற அன்னதானம்… திருச்செந்தூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 17 முக்கிய கோயில்களில் அதிரடி மாற்றம்..!!

Published

on

தமிழகத்தில் உள்ள முக்கியக் திருக்கோயில்களில் வழங்கப்படும் அன்னதானத் திட்டத்தில், நீரிழிவு நோயாளிகள் மற்றும் முதியவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சத்தான உணவு வகைகளை வழங்குவது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். பாரம்பரியமாக வழங்கப்படும் அன்னதான உணவுகளுடன் சேர்த்து, உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கும் ஏற்றவாறு இந்த உணவுமுறை மாற்றம் அமையவுள்ளது.

இந்த புதிய அன்னதான மாற்றுக் திட்டத்தை முதற்கட்டமாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் புகழ்பெற்ற 17 முக்கியக் கோயில்களில் சோதனை முறையில் அமல்படுத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது. வயோதிகர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் எவ்வித பயமும் இன்றி, தங்களின் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவை இறைப்பிரசாதமாக உட்கொள்ள இந்த ஏற்பாடு வழிவகை செய்யும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இதன்படி, வழக்கமான வெள்ளை அரிசி சாதத்திற்குப் பதிலாகச் சிறுதானிய உணவுகள், சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும் பாரம்பரிய அரிசி வகைகள், காரம் மற்றும் கொழுப்பு குறைந்த காய்கறி கூட்டு மற்றும் கீரை வகைகள் அன்னதானத்தில் சேர்க்கப்படவுள்ளன. ஆன்மீகப் பணியோடு பக்தர்களின் உடல் ஆரோக்கியத்தையும் பேணும் இந்த உன்னத முயற்சிக்கு ஆன்மீகப் பெரியோர்கள் மற்றும் பொதுமக்களிடையே தற்போதே பெரும் வரவேற்பும் பாராட்டும் எழுந்துள்ளன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in