CRIME
“அரசுவேலை வாங்கி தாரேன்…” மயக்க மருந்து கொடுத்து தையல் தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்.. நெடுஞ்சாலையில் வீசிய காம கொடூரன்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
ஹைதராபாத் மல்லாப்பூர் பிரம்மபுத்திரா காலனியைச் சேர்ந்த 30 வயது தையல் தொழிலாளி பெண்ணுக்கு, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.5 லட்சம் பணத்தைப் பறித்துவிட்டு, அவரை ரிசார்ட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புவனகிரியைச் சேர்ந்த ஜெகன்மோகன் என்ற நபர், தான் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு மேலாளராகப் பணிபுரிவதாகக் கூறி அப்பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளார். தனது அலுவலகத்திலேயே அவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு உயர் அதிகாரிக்கு ரூ.5 லட்சம் தர வேண்டும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்தப் பெண், நகைகளை விற்றும் கடன் வாங்கியும் ரூ.4.5 லட்சம் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.
திங்கள்கிழமை அன்று நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, அப்பெண்ணை ஜெகன்மோகன் தனது காரில் ஏற்றி ஸ்ரீ நிதி ரிசார்ட்டிற்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு உயர் அதிகாரி இருப்பதாகக் பொய் கூறி, ஒரு அறைக்குள் வைத்து அப்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்னர், அவரை காரில் ஏற்றிச் சென்று நெடுஞ்சாலையில் தூக்கி வீசிவிட்டுப் பணத்துடன் தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் கட் கேசர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து காமுகன் ஜெகன்மோகனை அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்.
