“குஷியோ குஷி.. தீபாவளி சரவெடி ஆஃபர்..” கடலைப்பருப்பு முதல் பூண்டு வரை… ரூ.200-க்கு 10 பொருட்கள் வழங்கும் அரசு..! நாளை தொடங்கும் செம பிளான்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“குஷியோ குஷி.. தீபாவளி சரவெடி ஆஃபர்..” கடலைப்பருப்பு முதல் பூண்டு வரை… ரூ.200-க்கு 10 பொருட்கள் வழங்கும் அரசு..! நாளை தொடங்கும் செம பிளான்..!!

Published

on

தமிழக கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மளிகைப் பொருட்களை வழங்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது 10 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.200-க்கு விற்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய், தனியா, பூண்டு, புளி, கடுகு, சீரகம், சோம்பு ஆகிய பொருட்கள் இந்த மளிகை தொகுப்பில் அடங்கும். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மளிகை பொருட்கள் வழங்குவதற்காக இந்த மளிகை தொகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்த திட்டம் சென்னையில் நாளை தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மளிகை பொருட்கள் கிடைக்க செய்யும் முயற்சி செயல்படுத்தப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in