LATEST NEWS
இது என்ன புது கூத்து..! நடுரோட்டில் லுங்கியை மாற்றி சேலை கட்டிய ஆண்கள்.. பெண்களின் ஆடை அணிந்து பிச்சை எடுக்கும் கும்பல்… சமூக வலைதளங்களில் சூடாகும் விவாதம்..!!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அங்குள்ள ஒரு முக்கிய சந்திப்பு மற்றும் பொது இடங்களில் ஆண்கள் சிலர் சேலை அணிந்து கொண்டு சுற்றித் திரிவது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் பெண்களின் உடைகளை அணிந்து கொண்டு, பொதுமக்களிடம் பணம் கேட்டுப் பிச்சை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஆரம்பத்தில் சாதாரண ஆண்களின் உடைகளை அணிந்திருந்த இருவரும், அதன்பிறகு ஒரு கட்டிடத்தின் மூலையில் நின்று தங்கள் ஆடைகளை மாற்றி சேலை மற்றும் பிளவுஸ் அணிவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதனால், இவர்கள் டிராஃபிக் சிக்னல்களில் வேண்டுமென்றே பிச்சை எடுப்பதற்காக இந்த வேடத்தை அணிந்தனரா அல்லது இவர்களின் நோக்கம் வேறு ஏதாவது உள்ளதா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
தற்போது சில முக்கிய டிராஃபிக் சிக்னல்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிலர் பெண்களின் உடைகளை அணிந்து கொண்டு பணம் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்கள் தங்கள் அடையாளத்தை மறைக்க முயல்கிறார்களா அல்லது இது போன்ற செயல்களுக்குப் பின்னால் ஏதேனும் பெரிய கும்பல் உள்ளதா என்ற கோணத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன. எனினும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முறையான விசாரணைக்குப் பின்னரே இவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பது முழுமையாகத் தெரியவரும்.
