“தலையிட்டீங்கனா உடனே மாத்திருவேன்”அமைச்சர்களுக்கு CM விஜய் விடுத்த அதிரடி எச்சரிக்கை… ஆடிப்போன தவெக வட்டாரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தலையிட்டீங்கனா உடனே மாத்திருவேன்”அமைச்சர்களுக்கு CM விஜய் விடுத்த அதிரடி எச்சரிக்கை… ஆடிப்போன தவெக வட்டாரம்..!!

Published

on

அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களின் பணியிடமாற்றத்தில் அமைச்சர்கள் யாரேனும் தலையிட்டால், அவர்களின் இலாகாக்கள் உடனடியாக மாற்றம் செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், மக்கள் நலப் பணிகளிலும் நிர்வாகத்திலும் எவ்வித அரசியல் தலையீடும் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

அமைச்சர்கள், அவர்களது தனி உதவியாளர்கள் (PA), நண்பர்கள் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோரின் செயல்பாடுகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்பதை உணர்த்தும் வகையில் இந்த உன்னிப்பான கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் அமைச்சர்களிடம் திட்டவட்டமாக எடுத்துரைத்துள்ளார்.

Advertisement

மேலும், அமைச்சர்களின் பெயரைப் பயன்படுத்தியோ அல்லது அவர்களது செல்வாக்கைக் காட்டியோ யாரும் எவ்வித லஞ்ச லாவண்யத்திலும், முறைகேடுகளிலும் ஈடுபடக் கூடாது என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவதை அமைச்சர்கள் அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in