LATEST NEWS
“நீக்கப்பட்டது நீக்கப்பட்டதுதான்..” அதிமுகவில் மீண்டும் இணைக்கப்படுவார்களா..? செய்தியாளர் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ‘ஷாக்கிங்’ பதில்..!!
திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைக்கப்படுவார்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டதுதான் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும் அவர் தனது பேட்டியின் போது தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் விமர்சித்தார்.
அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாகவும், தமிழ்நாட்டில் ரீல்ஸ் ஆட்சி நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், கசாப்பு கடை போன்று ஆட்களை வெட்டிச் சாய்ப்பதாகவும் தெரிவித்த அவர், தவெக ஆட்சிக்கு தான் அளிக்கும் மதிப்பெண் மைனஸ் பூஜ்ஜியம் என்றும் கடுமையாக விமர்சித்தார்.
