“உடல் முழுவதும் இருந்த காயங்கள்..” கள்ளக்காதலனின் வெறிச்செயலுக்குப் பலியான 3 வயது குழந்தை… உடந்தையாக இருந்த தாய்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“உடல் முழுவதும் இருந்த காயங்கள்..” கள்ளக்காதலனின் வெறிச்செயலுக்குப் பலியான 3 வயது குழந்தை… உடந்தையாக இருந்த தாய்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் பகுதியில், 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பைனான்ஸ் அதிபர் யோகராஜ் (32) மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த குழந்தையின் தாய் ஆகிய இருவரை நாச்சியார்கோவில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் கணவர் வேலை பார்த்து வரும் சூழ்நிலையில், சுயஉதவிக் குழு முகவராக வேலை பார்த்து வந்த 24 வயது பெண்ணுக்கும், அந்த பைனான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான யோகராஜுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்ற யோகராஜ், அங்குள்ள 3 வயது பெண் குழந்தைக்கு கொடூரமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்து, உடலெங்கும் கடித்துக் குதறியுள்ளார்.

குழந்தையின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு சந்தேகமடைந்த பாட்டி மற்றும் அப்பகுதி மக்கள், அக்டோபர் 29 அன்று குழந்தையை நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், யோகராஜின் பாலியல் அத்துமீறல்களுக்கு அந்தப் பெண் சமீபத்தில் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்து அவரது 3 வயது குழந்தைக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததும், இந்த கொடூர சம்பவத்திற்கு குழந்தையின் தாயும் உடந்தையாக இருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. மருத்துவப் பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Advertisement

இந்தக் கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் அவரது மூத்த மகன் ஆகிய இருவரையும் மீட்ட போலீசார், தற்போது அவர்களது பாட்டியின் பொறுப்பில் ஒப்படைத்துள்ளனர். மேலும், இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து வெளிநாட்டில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கும் போலீசாரால் அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in