அவகாசம் முடிந்தது… இனி இந்த லாரிகளுக்கு பர்மிட் கிடையாது..! தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அவகாசம் முடிந்தது… இனி இந்த லாரிகளுக்கு பர்மிட் கிடையாது..! தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!!

Published

on

கனிமங்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களில் ஜி.பி.எஸ். இல்லாவிட்டால் இன்று முதல் அனுமதி சீட்டு வழங்கப்படாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கனிம வளங்களைக் கொண்டு செல்லும் அனைத்து வகையான சரக்கு வாகனங்களிலும், சட்டவிரோதக் கனிமக் கடத்தலைத் தடுக்கவும், வெளிப்படைத் தன்மையுடன் கூடிய கண்காணிப்பை உறுதி செய்யவும் ஏஐஎஸ்-140 தரநிலைக் கொண்ட ஜி.பி.எஸ். கண்காணிப்புக் கருவி பொருத்தி, அதனை சுரங்கத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்துடன் (https://mimas.tn.gov.in/) ஒருங்கிணைக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கான இறுதி கால அவகாசம் 31-ந் தேதியுடன் (நேற்றுடன்) முடிவடைந்தது. எனவே 1-ந் தேதி (இன்று) முதல், ஏஐஎஸ்-140 ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு, இணையதள ஒருங்கிணைப்பு செய்யப்படாத எந்தவொரு வாகனத்திற்கும் கனிமப் போக்குவரத்து அனுமதிச் சீட்டு எக்காரணம் கொண்டும் வழங்கப்பட மாட்டாது.

Advertisement

மணல், ஜல்லி உள்ளிட்ட அத்தியாவசியக் கட்டுமானப் பொருட்கள் தடையின்றி, சீராகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். எனவே, இதுவரை ஜி.பி.எஸ். கருவி பொருத்தாத மற்றும் இணையத்தில் இணைக்காத வாகன உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள், உடனடியாகத் தங்களது வாகனங்களில் தர அங்கீகாரம் பெற்ற ஜி.பி.எஸ். கருவிகளைப் பொருத்தி துறையின் தளத்தில் ஒருங்கிணைக்க வேண்டும். ஜி.பி.எஸ். கருவி மற்றும் செல்லத்தக்க அனுமதிச் சீட்டு இன்றி கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, பறிமுதல் செய்யப்படுவதோடு, வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கட்டுமானப் பொருட்களின் தொடர் வினியோகத்தை உறுதி செய்யவும், தேவையற்ற போக்குவரத்துத் தடைகளைத் தவிர்க்கவும் அனைத்து வாகன உரிமையாளர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கும், சுரங்கத்துறைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in