Uncategorized
“கூமுட்டைக்காரன்” திமுக – அதிமுக ரகசிய கூட்டணி? சீமானை படுமோசமாக விளாசிய தவெக எம்.எல்.ஏ முஸ்தபா..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து தவெகவின் நல்லாட்சியைக் கெடுக்கவும், தவெக அரசு தொடரக் கூடாது எனவும் திட்டமிடுவதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அண்மையில் வரவிருக்கும் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பொது வேட்பாளராக நிறுத்த திமுக, அதிமுக மற்றும் பிற எதிர்க்கட்சிகள் மறைமுகமாக ஆதரவளிப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரவிய தகவல்களின் பின்னணியில் இந்த விவகாரம் எழுந்துள்ளது.
இச்சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மறைமுகமாக விமர்சித்த முஸ்தபா, “எப்போதும் பூஜ்ஜியத்திலேயே இருக்கும் கூமுட்டைக்காரன். அவரின் வாக்குகளைக் கணக்கிட்டார்களா? என்பதே தெரியவில்லை. அவரைப் பொது வேட்பாளர் எனக் கூறுவதற்கு என்ன தகுதி உள்ளது?” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார்.
