நள்ளிரவில் பயங்கரம்.. திடீரென உடைந்த சாலை.. 5 அடி ஆழப் பள்ளத்தில் சிக்கிய ஆட்டோ.. பதறிய மக்கள்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

நள்ளிரவில் பயங்கரம்.. திடீரென உடைந்த சாலை.. 5 அடி ஆழப் பள்ளத்தில் சிக்கிய ஆட்டோ.. பதறிய மக்கள்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Published

on

கொளத்தூர் செந்தில் நகர் 2-வது மெயின் ரோடு பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென சாலை உடைந்து சுமார் 5 அடி ஆழத்திற்குப் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. அந்த சமயத்தில், கொளத்தூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற ஓட்டுநர், தனது ஆட்டோவை அங்கு நிறுத்திவிட்டு அருகில் உள்ள மளிகைக் கடைக்குத் தண்ணீர் குடிக்கச் சென்றிருந்தார். அவர் சென்ற சில நிமிடங்களிலேயே ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் சாலை உள்வாங்கியதால், அந்த ஆட்டோ தலைகீழாகப் பள்ளத்திற்குள் சிக்கி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து உடனடியாக ராஜமங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அருகில் இருந்த மெட்ரோ ரயில் பணி ஊழியர்கள், கிரேன் இயந்திரத்தின் உதவியோடு பள்ளத்தில் சிக்கியிருந்த ஆட்டோவை பத்திரமாக மீட்டனர். அப்பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், நிலத்தடியில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாகவே இந்தச் சாலைப் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது அந்தச் சாலைப் பள்ளத்தை அவசரமாகச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in