“மடிந்து போன மனிதநேயம்..!” விபத்தில் துடித்த நபர்… கண்டும் காணாமல் கடந்து சென்ற வாகன ஓட்டிகள்.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி..!! – cinefeeds
Connect with us

CRIME

“மடிந்து போன மனிதநேயம்..!” விபத்தில் துடித்த நபர்… கண்டும் காணாமல் கடந்து சென்ற வாகன ஓட்டிகள்.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி..!!

Published

on

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள பொயினபள்ளி சாலை அருகே, பிட்டலபள்ளி பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் மல்லையா என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதிவேகமாக வந்த கார் ஒன்று மல்லையாவின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், பாதிக்கப்பட்டவருக்கு உதவ முற்படாமல் சம்பவ இடத்திலிருந்து காரை நிறுத்தாமல் அதிவேகமாகத் தப்பியோடியுள்ளார்.

இந்த விபத்தின் போது மனிதநேயமற்ற மற்றொரு அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறியுள்ளது. சாலையில் பலத்த காயங்களுடன் மல்லையா உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையிலும், அந்தச் வழியாகச் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் யாரும் மல்லையாவைக் காப்பாற்ற முன்வரவில்லை. கீழே விழுந்து கிடந்த நபரைக் கண்டும் காணாமல் கடந்து சென்ற வாகன ஓட்டிகளின் இந்தச் செயல், மனிதநேயம் மடிந்து வருவதை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மல்லையா, தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார் ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in