CRIME
“நள்ளிரவில் காதலியை பார்க்க வந்த கள்ளக்காதலன்..” கிராம மக்கள் செய்த அதிரடி காரியம்.. கடைசியில் போலீஸ் கொடுத்த ட்விஸ்ட்.. வைரல் வீடியோ..!!
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தின் லட்சுமிபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சக்கல் கிராமத்தில், திருமணமான தனது காதலியை நள்ளிரவில் ரகசியமாகச் சந்திக்க வந்த சூரஜ் தாஸ் என்ற இளைஞரை கிராம மக்கள் கையும் களவுமாகப் பிடித்து தர்மஅடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான தனது காதலியைச் சந்திக்கச் சென்ற சூரஜ் தாஸைக் கிராம மக்கள் சிலர் கவனித்துவிட்டனர். மக்கள் திரள்வதைக் கண்டு பயந்துபோன அந்த வாலிபர், அங்கிருந்த ஒரு கூரை வீட்டின் உள்கூரை மரக்கட்டைகளைப் பற்றிக்கொண்டு மறைந்து கொள்ள முயன்றுள்ளார். எனினும், விடாமல் தேடிய கிராம மக்கள் அவரைப் பிடித்துக் கீழே இழுத்து வந்து சரமாரியாகத் தாக்கியதால் அப்பகுதியில் நள்ளிரவில் பெரும் பரபரப்பான நாடகம் அரங்கேறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த கிராம மக்கள், அங்கேயே அந்த கள்ளக்காதல் ஜோடிக்குத் திடீர் திருமண ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து லட்சுமிபூர் காவல் நிலைய போலீஸார் உடனடியாக சக்கல் கிராமத்திற்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். போலீஸார் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அந்தப் பெண் சட்டப்பூர்வமாகத் தனது கணவருடன் வாழ ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் கணவரிடமே ஒப்படைக்கப்பட்டார். அந்த வாலிபர் கூரையின் மேல் தொங்கியபடி ஒளிந்திருப்பதும், மக்கள் அவரைப் பிடித்து அடிப்பதும் போன்ற பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
