கள்ள ஓட்டு பாஸ்..! விரல் மையை அழித்துவிட்டு மீண்டும் வாக்குச் செலுத்த அனுப்பிய கூட்டணித் தலைவர்கள்.. வாக்குச்சாவடி அருகே சிக்கிய நபர்.. பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கள்ள ஓட்டு பாஸ்..! விரல் மையை அழித்துவிட்டு மீண்டும் வாக்குச் செலுத்த அனுப்பிய கூட்டணித் தலைவர்கள்.. வாக்குச்சாவடி அருகே சிக்கிய நபர்.. பெரும் பரபரப்பு..!!

Published

on

ஆந்திர மாநிலம் திருப்பதில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவின் போது, வாக்குச் சாவடிகளுக்கு அருகில் பெரும் முறைகேடுகள் நடப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திருப்பதி மாநகராட்சியின் 15-வது வார்டுக்கு உட்பட்ட கேசவரெட்டி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு மிக அருகிலேயே இந்த விதிமீறல்கள் அரங்கேறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்குள்ள வாக்குச் சாவடிக்கு வெளியிலேயே தெலுங்கு தேசம் கட்சி (TDP) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் சிலர், கைகளில் ‘இங்க் ரிமூவர்’ (தேர்தல் மை அழிப்பான்) திரவங்களுடன் சுற்றித் திரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கள்ள ஓட்டுகளைச் செலுத்துவதை வழக்கமாகக் கொண்ட சிலர், இந்தத் திரவங்களைப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படுகிறது.

Advertisement

குறிப்பாக, ஒரு முறை வாக்களித்துவிட்டு வெளியே வரும் நபர்களின் விரல்களில் வைக்கப்படும் அழியாத தேர்தல் மையை, பஞ்சு மற்றும் அந்தத் திரவத்தைக் கொண்டு முழுமையாகத் துடைத்து அழித்துள்ளனர். அவ்வாறு மையை அழித்த பின்னர், அதே நபர்களை மீண்டும் அதே வாக்குச் சாவடிக்குள் அனுப்பி அடுத்தடுத்து கள்ள ஓட்டுகளைச் செலுத்த வைப்பதாகக் கூறி, தேர்தல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in