CRIME
அடச்சீ.. இவேளெல்லாம் ஒரு பொண்டாட்டியா..? கள்ளக்காதலை தட்டி கேட்ட கணவன்… பற்களால் சதையைக் கடித்துக் குதறிய மனைவி..! நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரம்..!!
ஜெய்ப்பூரைச் சேர்ந்த 41 வயது நபரின் மனைவி, வேறு ஒரு நபருடன் தவறான உறவில் இருந்துள்ளார். கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி காலை 6:30 மணியளவில், ஜெய்ப்பூரின் படி சௌபர் பகுதியில் தன் மனைவியை அந்த நபருடன் ஆட்சேபனைக்குரிய முறையில் கணவர் நேரில் கண்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் அதைத் தட்டிக்கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கு நின்றிருந்த சிலர் இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலாகப் பரவியது.
அன்று இரவு 8:30 மணியளவில், மனைவியும் அவரது ஆண் நண்பரும் கணவரின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று, அவரைத் தீர்த்துக்கட்டும் நோக்கில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மனைவியின் ஆண் நண்பர் கணவரின் முகம், கைகள் மற்றும் உடலின் பல பகுதிகளில் கூர்மையான கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். அதே நேரத்தில், கணவரின் இரண்டு கைகளையும் பலமாகப் பிடித்துக்கொண்ட மனைவி, தன் பற்களால் கணவரின் உடலின் பல இடங்களில் கொடூரமாகக் கடித்து, சதையைப் பிடுங்கும் அளவுக்கு வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
முறையற்ற தொடர்புகளின் காரணமாக மனித உறவுகளின் மதிப்பும் தர்மமும் முற்றிலுமாகச் சீர்குலைந்து வருவதை இச்சம்பவம் காட்டுகிறது. இச்சாட்டுகளால் கண்மூடித்தனமாகச் செயல்படும் சிலர், தாங்கள் இணைந்து வாழ்ந்த நினைவுகளையும் துணையின் அன்பையும் மறந்து, அவரைக் கொல்வதற்கும் தயங்குவதில்லை. இத்தகைய அத்துமீறிய உறவுகளாலும், வன்முறை எண்ணங்களாலும் அப்பாவி மனிதர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு, சமூகத்தில் கொடூரமும் இரக்கமின்மையும் அதிகரித்து வருவது பெரும் கவலையளிப்பதாக உள்ளது.
