LATEST NEWS
விலகியது மர்மம்.. கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு 50 நாட்களுக்குப் பின் வீடு திரும்பினார்..!!!
கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ்.பாபு, மூச்சுத்திணறல் காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகத் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சுவாசக் கோளாறு காரணமாகக் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு, பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
கடந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு, அவரை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி பெரும் வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தவெக அமைச்சர்கள் மற்றும் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் ஆகியோர் நேரில் சென்று இவரது உடல்நலம் குறித்து மருத்துவக் குழுவிடம் கேட்டறிந்தனர்.
வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனை நிர்வாகம் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாததால், எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதோடு அவரது உடல்நிலை குறித்துப் பல்வேறு வதந்திகளும் பரவி வந்தன. தற்போது அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதன் மூலம், அவரது உடல்நிலை குறித்து நீடித்து வந்த மர்மங்களுக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
