“என் மேலேயே கையை வைக்கிறியா..?” கொதிக்கும் தேநீரை முகத்தில் ஊற்றிய கடை உரிமையாளர்.. நெஞ்சை பதறவைக்கும் சண்டை வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் மேலேயே கையை வைக்கிறியா..?” கொதிக்கும் தேநீரை முகத்தில் ஊற்றிய கடை உரிமையாளர்.. நெஞ்சை பதறவைக்கும் சண்டை வீடியோ..!!

Published

on

அசாம் மாநிலம் குவஹாத்தியின் பல்தான் பஜார் பகுதியில், சிகரெட் லைட்டர் தொடர்பான ஒரு சிறிய வாக்குவாதம், நள்ளிரவில் கொதிக்கும் தேநீரை முகத்தில் ஊற்றும் அளவிற்குப் பயங்கரமான தெருச்சண்டையாக மாறிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தன்று கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், தேநீர் கடை உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து, தான் வைத்திருந்த ஹெல்மெட்டை எடுத்து அவரைத் திடீரெனத் தாக்கத் தொடங்கினார்.

தன்னை நோக்கி வந்த ஹெல்மெட் தாக்குதலால் கோபமடைந்த கடை உரிமையாளர், சற்றும் யோசிக்காமல் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சூடான தேநீர் பாத்திரத்தை எடுத்து, அந்த வாடிக்கையாளரின் முகத்திலேயே நேரடியாக ஊற்றித் தடுத்துள்ளார். கொதிக்கும் தேநீர் உடம்பில் பட்ட அந்த ஒரு நொடியிலேயே, வாடிக்கையாளரின் தாக்குதல் வேகம் குறைந்து சண்டை உடனடியாக முடிவுக்கு வந்தது. நள்ளிரவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தத் துணிகர மோதலின் காட்சிகள் அங்கிருந்தவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in