CRIME
அடக் கொடுமையே.. ஓடும் ரயில் முன் பாய்ந்த கள்ளக்காதல் ஜோடி.. கதறும் 2 குழந்தைகள்.. நெஞ்சை உறையவைக்கும் பின்னணி..!!
கர்நாடக மாநிலம் மண்டியா நகரின் புறநகர்ப் பகுதியான வி.சி.பார்ம் ரயில் கேட் அருகே, ஓடும் ரயிலில் மோதி சஹானா (25) என்ற திருமணமான பெண்ணும், ராகுல் (23) என்ற இளைஞரும் பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மண்டியாவைச் சேர்ந்த சஹானா, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வீரேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில், குடும்பத்துடன் பெங்களூரு மாதநாயக்கனஹள்ளியில் வசித்து வந்தனர். அப்போது, தாங்கள் குடியிருந்த அதே கட்டிடத்தில் வசித்து வந்த ராகுல் என்ற இளைஞருடன் சஹானாவிற்குப் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாக மாறியுள்ளார். இந்த விஷயம் கணவருக்குத் தெரிந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு, பெரியவர்கள் சமாதானம் செய்தும் சண்டை ஓயவில்லை.
சமீபத்தில் இந்த விவகாரத்தில் மீண்டும் தகராறு வெடிக்க, சஹானா பெங்களூரு வீட்டை விட்டு வெளியேறி மண்டியாவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று ராகுலும் மண்டியாவிற்கு வந்துள்ளார். அதன் பின்னர், இருவரும் வி.சி.பார்ம் ரயில் தண்டவாளத்தில் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த மண்டியா ரயில்வே காவல்துறையினர், உடல்களைக் கைப்பற்றி மிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனை வாசலில் கதறி அழுத சத்தம் பார்ப்பவர் நெஞ்சைக் கரைய வைத்தது. இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து, இருவரது மரணத்திற்கான துல்லியமான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
