LATEST NEWS
அடுத்தடுத்த அதிர்ச்சி..! வகுப்பறையிலேயே மாரடைப்பால் சுருண்டு விழுந்த 8-ஆம் வகுப்பு மாணவன்.. நாட்டையே உலுக்கும் சிறுவர்களின் திடீர் மரணங்கள்..!!
உத்தரப் பிரதேசம் லக்னோவில் 13 வயது பள்ளி மாணவன் மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8-ஆம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவன், வகுப்பறையில் இருந்தபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளான். சமீபகாலமாக சிறிய வயதுக் குழந்தைகளிடையே மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருவது பெற்றோர்களிடையே பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.
லக்னோ சம்பவத்திற்கு முன்பாகவே, டெல்லியில் 9 வயது சிறுமியும், முசாஃபர்நகரில் 10 வயது சிறுவனும் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இந்த துயரச் சம்பவங்கள், மாரடைப்பு என்பது பெரியவர்களுக்கு மட்டுமே வரும் என்ற பொதுவான கருத்தை மாற்றியமைத்துள்ளது. குழந்தைகளிடம் ஏற்படும் இத்தகைய திடீர் உடல்நலப் பாதிப்புகள் குறித்து தீவிரமான விழிப்புணர்வு தற்போதைய அவசியத் தேவையாக மாறியுள்ளது.
குழந்தைகள் விளையாடும் போது மயக்கம், நெஞ்சு வலி, நெஞ்சுப் படபடப்பு, மூச்சுவிட சிரமம் அல்லது அசாதாரண சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இந்த எச்சரிக்கை அறிகுறிகளைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அலட்சியப்படுத்தாமல் கவனிப்பது மிகவும் முக்கியம். இவ்வாறான அசாதாரண மாற்றங்கள் ஏதேனும் தென்பட்டால் தாமதிக்காமல் தகுந்த பரிசோதனைகளைச் மேற்கொள்வது குழந்தைகளின் உயிரைக் காக்க உதவும்.
