CRIME
தமிழகத்தில் நள்ளிரவு பயங்கரம்… சுங்கச்சாவடி அருகே 2 சிறுவர்கள் வெட்டிக்கொலை.. மர்ம கும்பலுக்கு வலைவீச்சு..!!
திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே கூலி வேலை செய்து வந்த இரண்டு சிறுவர்கள் மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் புள்ளம்பாடி வாய்க்கால் கரை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ராகுல் மற்றும் விஷால் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சமயபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த இரு சிறுவர்களின் உடல்களையும் மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டைக் கொலைக்கான காரணம் முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் பழிவாங்கும் நோக்கியா என்ற கோணத்தில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
