“மனிதநேயமே செத்துவிட்டதா..?” பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தையைத் தெருவில் வீசிய கொடூரம்.. நாய்கள் கடித்துப் பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..! – cinefeeds
Connect with us

CRIME

“மனிதநேயமே செத்துவிட்டதா..?” பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தையைத் தெருவில் வீசிய கொடூரம்.. நாய்கள் கடித்துப் பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!

Published

on

தெலங்கானா மாநிலம் குமுரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், அடையாளம் தெரியாத நபர்களால் கைவிடப்பட்ட பச்சிளங்குழந்தை தெருநாய்கள் கடித்துக் குதறியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கல்நெஞ்சம் கொண்ட சிலர் பிறந்த சில மணி நேரங்களே ஆன அந்தக் குழந்தையை இரக்கமின்றி கிராமத்தில் வீசிச் சென்றுள்ளனர்.

அந்தக் குழந்தையைத் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் படுகாயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உள்ளூர்வாசிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மனதை உலுக்கும் இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in